ஆகஸ்டு மாத இணைய இதழ் கதைகள் – சுரேஷ் பிரதீப்

நொட்டை – விஜயகுமார் (பதாகை)

சிறுவயதில் பதிந்துவிட்ட சில நம்பிக்கைகளை வளர்ந்தபின்னும் சில சமயம் நம்மால் மாற்றிக்கொண்டுவிட முடியாது. எந்த தர்க்கத்துக்குள்ளும் பொருந்தாத அதுபோன்ற ஒரு நம்பிக்கையை விஜயகுமார் கதையாக்கி இருக்கிறார். இக்கதையின் பிரச்சினை அதன் நீளம் தான். எந்த ஒரு செயலிலும் நிகழ்விலும் நூறு சதவீத ஒழுங்கு நிகழ்த்தப்பட்டிருந்தால் அதன் முடிவு அனுகூலமாக இருக்காது என்ற முடிவுக்கு கதைசொல்லி சிறுவயதில் செய்த ஒரு சாகசத்தால் வந்து சேர்கிறான். அந்த நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டே ஒவ்வொரு செயலிலும் ஈடுபடுகிறான். எதிலும் ஒரு “நொட்டை”யை உருவாக்குவது அவனுடைய வழக்கமாகிறது. நன்கு படித்து நல்ல பணிக்குச் சென்ற பின்னும் இந்த பழக்கம் அவனைவிட்டுப் போவதில்லை. அவனுக்கு பெண் பார்க்கிறார்கள். மணப்பெண்ணை அவனுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் பெண் பார்க்கும் படலம் எந்த நொட்டையும் இல்லாமல் நிகழ்வது அவனைப் பதற்றப்படுத்துகிறது. இப்படலம் நொட்டையில்லாமல் முடிந்தால் தனக்கு அப்பெண்ணுடன் மணமாகாமல் போய்விடும் என்று அஞ்சுகிறான். அந்த சமயம் அவன் கண்ணில் ஒரு “நொட்டை” தென்படும் இடத்தில் கதையை முடிகிறது. சரியான புள்ளியில் தொடங்கி சரியாக கதை முடிக்கப்பட்டிருந்தாலும் கதையுடலுக்குள் ஆசிரியர் அதிகமாக அலைந்திருப்பது வாசிப்பில் சற்று ஆயாசத்தை உருவாக்குகிறது. மற்றபடி நல்ல கூறுகள் தென்படும் கதை. நண்பர்கள் வாசித்துப் பார்க்கலாம்

நொட்டை – விஜயகுமார் சிறுகதை

மெய்நிகரி – கார்த்திக் பாலசுப்பிரமணியன் (தமிழினி)

தனிமனிதனின் சுயம் பெருகிவிட்ட அதை கட்டுக்குள் வைப்பதற்கான மரபான அமைப்புகளின் தார்மீக பலம் குன்றிவிட்ட சூழலில் தனிமனிதர்களுக்கு இடையேயான உறவுநிலைகளில் தோன்றக்கூடிய சிக்கல்களை அவர்கள் சார்ந்திருக்கும் நவீன நிறுவனங்களே கையாள வேண்டிய ஒரு சூழல் உருவாகி இருப்பதை சித்தரிக்கும் கதை. மிக வலுவான கதைக்கரு. கதையின் ஒழுக்கிலும் எந்தவிதமான சிக்கலும் இல்லை. எனினும் இவ்வளவு வலுவான கதைக்கரு அதற்குரிய விரிவுடன் சித்தரிக்கப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை. நித்தில் மீராவுடன் ஏற்பட்ட பிரிவுக்குப் பிறகு பதிமூன்று ஆண்டுகள் தனித்து வாழும் ஒரு ஓவியன். அவனைப் போன்று உறவுச்சிக்கல் கொண்டவர்களுக்கு தற்காலிகமான உணர்வு வடிகாலாக ஒரு “மாதிரி” உறவுகளை (தாய்,தகப்பன், நண்பன் என அனைத்து சேவைகளும் உண்டு) ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்து தருகிறது. நித்தில் மீராவின் மாதிரியை இரண்டு மணிநேரங்கள் சந்தித்து பேசிக்கொண்டிருப்பதுதான் கதை. காதலுறவில் தகிக்கும் ஈகோ யார் விட்டுக்கு கொடுப்பது என்பதில் தோன்றும் அடம் அதனால் ஏற்படும் பிரிவு அந்தப் பிரிவுடன் சம்மந்தே இல்லாமல் தன் முன்னே அமர்ந்திருக்கும் மீராவின் “மாதிரி” என நன்றாகவே வளர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதுபோன்ற புதுமையான கதைக்களத்தில் ஆர்வங்கொண்ட வாசகனாக அந்தக் கதைக்களம் குறித்து என் கேள்விகள் நீள்கின்றன. மிக முக்கியமாக ஒரு உணர்வைப்பூர்வமான சந்திப்பில் காமம் தவிர்க்க முடியாத அம்சமாக முன்வந்தால் அந்த நிறுவனம் என்ன செய்யும்? அந்த “மாதிரி” மனிதருக்கு பின்னிருக்கும் உண்மையான மனிதருடன் வாடிக்கையாளர் அந்நேரம் நேசங்கொண்டால் அந்த நேசம் சுமத்தப்பட்ட உருவகத்தின் மீதா உருவகத்திற்கு பின்னிருக்கும் உண்மையின் மீதா?

இது போன்ற விஷயங்கள் கதையில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம். எனினும் மெய்நிகரி தன்னளவிலேயே நல்ல கதை. நண்பர்கள் வாசிக்கலாம்

http://tamizhini.co.in/2019/08/17/%e0%ae%ae%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s