அக்டோபர் 2020 மாத சிறுகதைகள் பரிந்துரை

கதை; கனவுக்குள் புகுந்த சிங்கம்

ஆசிரியர்: கணேஷ் வெங்கட்ராம்

இதழ்: பதாகை

விமர்சனம்: நந்தாகுமாரன், கமலதேவி, மு.குலசேகரன்.

சுட்டி: https://padhaakai.com/2020/10/05/169635/

*

கதையின் துவக்கமே ஒரு சர்ரியலிசச் சித்திரத்தைத் தோற்றுவித்து நம்மை அதற்குள் இழுக்க முயல்கிறது. கதாசிரியர் வாசகருக்கு ஒரு சம்பவத்தை விவரிப்பதாக அமைக்கப் பெற்றிருக்கும் கதைப் போக்கு யுக்தி ரீதியாக உதவவே செய்கிறது. கனவுக்கும் நிஜத்திற்கும் நேரும் குழப்பம் என்பது கனவா இல்லை நிஜமா என்ற கேள்வியை ஒரு ஆராய்ச்சி கட்டுரைக்கும் சம்பவங்களால் கோர்க்கப் பெறும் ஒரு கதைக்கும் இடையிலான ஒரு வடிவத்தில் முன்னெடுத்து நகர்கிறது படைப்பு. விழிப்புணர்வுடன் காணப்படும் கனவு என்பது நாம் நிகழ்த்த விரும்பும் நிஜம் தான் போல. வாழ்வில் நமக்கு நேரும் ஒரு சிக்கல் அல்லது ஒரு தேடல், அது தரும் உணர்வுகள், சூழலின் அபத்தம், அதற்கான தீர்வுகள் என்பதை, கதை, குறீயிடுகளால் சொல்ல முயல்கிறது. மேலும் உளவியல் ரீதியாகவும் கனவுகளை அணுகி ஆராய முயல்கிறது கதை. தகவல்களைக் கொண்டு ஒரு கதையை ஸ்வாரஸ்யமாக்குவது என்பது இதில் லகுவாகக் கைகூடி வந்திருக்கிறது. கனவுகளுக்கு சொல்லப்படும் ராசி பலன்கள் பகுதி கதையில் புன்னகையை வரவழைக்கக் கூடிய அபத்த நகைச்சுவை. ஒரு case report வகை தகவல் அறிக்கைக்கும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைக்கும் ஒரு கதைக்கும் இடையிலான ஒரு வடிவத்தில் நெய்யப்பட்டிருக்கிறது கதை. இதில் புதுமை இல்லையெனினும் புத்துணர்ச்சி இருக்கிறது தான். கதையை எல்லோரும் வாசித்து விவாதிக்கக் கோருகிறேன்.

*

கதையில் பின்னால் நிற்கும் சிங்கம் அவரே தான்.இல்லை அவரின் இன்னொரு ஆளுமை.எழுத்தாளர் என்பதால் சிங்கம் சரியாக பொருந்துகிறது.அவரின் கனவு…இலட்சியம்..தன்னறம்.. என்று பல உருவங்களில் இருக்கக்கூடியது.அதற்கும் நடைமுறைக்குமான போராட்டம்.அதைபற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு அது தெரியவில்லை.அமைதியாக இருக்கிறார்கள்.தெரிந்தவர்கள் ஒளிந்து கொள்ள விழைந்தாலும் அதன் பின்னால் செல்கிறார்கள்.அந்த முகமறியாதவர்களுடனான விவாதம் நாமே தான்.வேலைக்கும் கனவுக்கும் இடையில் சிக்கி நசுங்கும் எழுத்தாளரின் மனம்.கதையில் சொல்வதைப்போல கில்கமேஷ் மாதிரி இறவா வரம் தேடி ஓடுபவர்கள் கலைஞர்கள்.அந்த தொப்பி இளைஞன் எதார்த்ததளத்தில் வென்றவன் என்று தோன்றியது.நிச்யமாக சிங்கத்திற்கு கோபம்…காட்டிலிருந்து வெளியேற்றி இங்கு கொண்டுவந்து வைத்திருப்பதால்.இறுதியாக சிங்கத்தை கைக்குள் காக்க தொடங்கிவிட்டார்.இந்த தளத்தில் வாசித்தால் ஒவ்வொரு வரியும் விரிந்து செல்கிறது.நல்ல வாசிப்பனுபவம்.

இது ஒருவகை  mare dream சிக்கல்.உளவியல் சிக்கல்களுக்கான மாத்திரைகளால் விளைவது அல்லது உளவியல் சிக்கலால் விளைவது.ஆனால் கதையாகும் போது எத்தனை அழகாக மாறுகிறது.எனக்கு மனதை தொந்தரவு செய்யக்கூடிய துன்பியல் கதையாக  இருக்கிறது.

*

கனவுக்குள் புகுந்த சிங்கம் சிறுகதை அதன் சொல்வதிலுள்ள நிச்சயமின்மை அர்த்தமின்மையில் மிகவும் கவர்ந்தது. எழுத்தாளன் / சுதந்திரம் அல்லது பரந்த கோணத்தில் சதா பயந்து அல்லலுற்றுத் தீர வேண்டிய மனம் என எதுவாயிருந்தாலும் அதைக் காட்டுகிறது. கனவு பற்றிய அறிவியல் கோட்பாடுகள், மனித நம்பிக்கைகள், புராணம், நவீன இலக்கியம் போன்றவை இதன் ஊடாக வரும் பிரதிகள். அதனாலேயே அவை ஒன்றையொன்று சமன் செய்துகொள்ள முயலுகின்றன. ஆனாலும் விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் மித மிஞ்சியதால் புனைவாகாமல் வெறும் கருத்துகளாக நிற்கின்றன.

கதை: ஈடறவு

ஆசிரியர்: மயிலன் ஜி சின்னப்பன்

இதழ்: வாசகசாலை

விமர்சனம்: கமலதேவி

சுட்டி: https://www.vasagasalai.com/eedaravu-mayilan-g-chinnappan/

பதின்வயதின் துவக்கத்தில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் முதல் தர்மசங்கடத்தை சொல்லும் கதை.இறுதிவரை அவன் மறுப்பு சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் ஓரமாக சொல்லமாட்டான் என்றே தோன்றியது

கதை: பொதுச்சுடர்

ஆசிரியர்: தெய்வீகன்

இதழ்: யாவரும்.காம்

விமர்சனம்: கார்த்திக், சங்கர், லாவண்யா

சுட்டி: http://www.yaavarum.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/

*

நல்ல கதை. சிறப்பாக வந்திருக்கிறது.

*

போராளிகளை (புலிகளாக இருந்தவர்கள் )வைத்து தங்களின் இமேஜை வளர்த்துக்கொள்ள நினைப்பவர்கள் மீதான விமர்சனம்

*

மனித வினோதங்கள் நாட்டுப்பற்று கொள்கையென்பதற்கும், அசல் வாழ்க்கையின் போலித்தனத்துக்கும் நிறைய சம்மந்தம் இருப்பதான கதை. ஆனால் சில விஷயங்கள் சொல்லாமலே புரிவது. அதையும் விளக்கமாக எழுதியிருக்கார்.

கதை: கணை

ஆசிரியர்: ஐ கிருத்திகா

இதழ்: சொல்வனம்

விமர்சனம்: கமலதேவி

சுட்டி: https://solvanam.com/2020/10/24/%e0%ae%95%e0%ae%a3%e0%af%88/

*

கேள்விகளாக தொடரும் பெண் வாழ்க்கை பற்றிய எளிய கதை

கதை: காத்திருப்பு

ஆசிரியர்: சுஜா செல்லப்பன்

இதழ்: பதாகை

விமர்சனம் ; கமலதேவி, லாவண்யா

சுட்டி: https://padhaakai.com/2020/10/12/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%81%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2/

*

இந்தக்கதை நல்ல வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது.

*

மொழியும், சொல்லும் விதமும் நன்றாக இருக்கிறது. ஆனால் கதை இடையில் ஏனோ தொய்வடைகிறது. முடியும் போது காத்திருப்புக்காக முடிவுருவது கதையை முடிக்கவில்லை.

கதை: பலிபீடம்

ஆசிரியர்: முனைவர் ப. சரவணன்

இதழ்: சொல்வனம்

விமர்சனம்: கமலதேவி, லாவண்யா

சுட்டி : https://solvanam.com/2020/10/24/%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%aa%e0%af%80%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/

*

எதார்த்த கதையாக தொடங்கி ஒரு மாய எதார்த்த கதையாக மாற்றியிருக்கிறார். உத்தியும் நன்று. கதையும் நன்று.

*

பலிபீடம் ஒரு உருவக்கதை என்று நினைக்கிறேன்.நன்றாக வந்திருக்கிறது. உருவகக்கதையாக பார்க்கும் போது கதை தெளிவாக விரிகிறது.

கதை: அமுதா அக்கா

ஆசிரியர்: பாஸ்கர் ஆறுமுகம்

இதழ்: சொல்வனம்

விமர்சனம்: லாவண்யா

சுட்டி: https://solvanam.com/2020/10/24/%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/

*

கதை பாதிக்கு மேல் தான் ஆரம்பிக்கிறது, சிறுவயது நினைவுகளில் நகரும் இந்த கதையை ஒரு தரம் வாசித்துப் பார்க்கலாம்.

கதைகள் : மாய அழைப்பு, ரீங்கரிப்பு

ஆசிரியர்: கமலதேவி

இதழ்கள்: பதாகை, சொல்வனம்

விமர்சனம்: லாவண்யா

சுட்டிகள்:

https://padhaakai.com/2020/10/12/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

https://solvanam.com/2020/10/24/%e0%ae%b0%e0%af%80%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

*

பதாகை, சொல்வனம் இரண்டிலும் கமலதேவி கதைகள் வந்திருக்கிறது. பதாகை கதை எனக்கு கமலதேவி எழுதியிருக்கும் கதை மையம் அவர்களிடம் பேசிய பின்னர் தான் விளங்கியது. சொல்வனம் கதை வழக்கம் போல கிராம கிளாசிக். ஐயாற்றில் தண்ணீர் ஓடுறது கமலதேவிக்கு பலக்கதைகளை தருகிறது.

Leave a comment