டிசெம்பர் 2021 சில கதைகள்

கதை: சீதையின் கிளிகள்

ஆசிரியர்: கா சிவா

இதழ்: புரவி

பரிந்துரை: லாவண்யா

*

ஊர்மிளையை நாயகியாகக் கொண்ட கதை. இராமயண நிகழ்வுகளை இடையில் வந்திருக்கிறது. மனைவியிடம் சொல்லாமல் கூட காட்டுக்கு சென்றுவிட்ட லஷ்மணன் மீது ஊர்மிளாயின் கோபம், வெறுப்பு, தாபம், சமாதானம் எல்லாம் இன்னும் நுட்பமாக வந்திருக்க வேண்டிய கதை. ஊர்மிளையை நாயகியாக கொண்ட கதை என்பதற்காகவே இதை கண்டிப்பாக வாசிக்கலாம்.

கதை: சகதர்மினி
ஆசிரியர்:ஊஷாதீபன்
இதழ்:ஆவநாழி
பரிந்துரை: கமலதேவி

*

எந்தவகையிலும் சின்னஞ்சிறு வளைவுகூட இல்லாத நேர்கோடு போன்று எல்லாவகையிலும் சரியாக இருக்கும் ஆளுமையான மனைவி பற்றிய கதை.கதையின் முடிவு அவளின் சிறுபிசகிலிருந்து தொடங்குகிறது

கதை: நெருநல் உளலனொருத்தி

ஆசிரியர்: செந்தில் ஜெகன்நாதன்

இதழ்: தமிழினி

பரிந்துரை: லாவண்யா

*

வாசிக்கும் போது சமீபத்தில் இதே கருவைக் கொண்ட ஒரு கதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒருசமயம் வேண்டுமென்று ஏங்கி தவித்தது பின்னர் பாரமாவது தாய்மைக்கே உரிய சிக்கலோ?

https://tamizhini.in/2021/12/24/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%ae%a9%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/

கதை: ஹேர் கட்

ஆசிரியர்: ராம்சந்தர்

இதழ்: சொல்வனம்

பரிந்துரை: லாவண்யா

*

“ஒவ்வொரு சாகசத்துக்கும் ஒரு தோரணை”

மிக எளிமையான கதை. வாழ்க்கையின் ஒவ்வொரு பத்தாண்டும் ஒரு சாகசம் அல்லது வாழ்க்கையே சிந்துபாத் கதையை போல விரியும் சாகசம். சாகசம் என்றால் வில்லை வளைத்து மலையைப் பிடுங்கி என்று செய்வதற்கு அறியதை செய்வதில்லை. வாழ்தலே சாகசம் என்பதை சில சில சம்பவங்களாக நினைவோடையில் சொல்லிக் கொண்டே போகும் கதை. முடி வெட்டிக் கொண்டு வரும் போது வீட்டின் முதியவர்கள் காட்டும் கட்டுப்பாடு, அப்போது சம்மந்தப்பட்டவர் உணர்வது எல்லாமே சிறப்பாக வந்திருக்கிறது. நல்ல கதை சிறந்த வாசிப்பனுபவம்.

https://solvanam.com/2021/12/26/%e0%ae%b9%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d/

கதை:பெருக்கு
ஆசிரியர்:ஐ.கிருத்திகா
இதழ்: சொல்வனம்
பரிந்துரை: கமலதேவி

*

பாலூட்டும் பெண்ணின் சிரமங்களை சொல்லும் கதை. அதை உணர்வுபூர்வமாக அணுகுவதை விட உடலியல் உயிரியியல் சார்ந்த அனுபவமாக …அதன் நடைமுறை சிக்கல்களை எழுதியிருக்கிறார். இந்த இயல்பான தன்மை கதையின் பலம் என்று தோன்றுகிறது.

கதை: மணிமேகலையின் வாழ்விலே ஒரு தினம்
ஆசிரியர்: ஸிந்துஜா
இதழ்: பதாகை
பரிந்துரை: மு. குலசேகரன்

*

வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல முடியாமல் தேர்தல் பணியாற்ற வேண்டிய வழக்கமான மேல் மட்ட பெண் உயரதிகாரியின் சிறு அனுபவம். அரசு கட்டிடங்கள், வேலை, சூழல், மனிதர்கள், வேறு மொழி, பிரதேசம் என்று எல்லாவற்றின் மீதும் மெல்லிய கசப்பைக் கொண்டிருக்கிறாள் அவள். அதைப் போக்கிக் கொள்ளும் விதமாக வாழ்க்கையைப் பற்றிய சிறு வெளிச்சம் அவளுக்குக் கிடைக்கிறது. அதை இனி வளர்த்தெடுத்துக் கொள்ள வேண்டியது அவள் பொறுப்பு.

கதை: தேவைகள்
ஆசிரியர்: உஷாதீபன்
இதழ்: பதாகை
பரிந்துரை: மு. குலசேகரன்

*

வழக்கமான ஒண்டுக் குடித்தன வீட்டில் கணவன் உடலுறவுக்கு மனைவியை மறைவாக அழைக்கிறான். அதனுடன், அந்த வீட்டின், மில் வேலையின், சுற்றியுள்ள மனிதர்களின் பிரச்சினைகளை அவள் விரித்து, விரித்துக் காணுகிறாள். கூடவே பிரத்யேகமான தன் உடலின் சிக்கல்களையும். அவற்றிலிருந்து விடுபட தனிவீடு செல்லும் எண்ணத்தை உகந்த தருணமான உடலுறவின் போது கணவனிடம் வைக்கிறாள். அவன் கேட்காததால் அவள் உறவுக்கு மறுக்கிறாள். அங்கு நிறுத்திக் காட்டுவதின் வழி ஒரு பெரும் போராட்டத்தையே சித்தரித்து விடுகிறார் கதையாசிரியர்.

கதை: போட்டோ சார்
ஆசிரியர்: லட்சுமிஹர்
இதழ்: பதாகை
பரிந்துரை: மு. குலசேகரன்

*

பொது பூங்கா, அங்கு கட்டணத்துக்கு புகைப்படம் எடுக்கும் ஊழியரான போட்டோகிராபர் என்று புதிய கதைக் களம் நிறுவப்படுகிறது. ஒரு பெரும் கால மாற்றம் காமிரா வழியாகவே சொல்லப்பட்டு விடுகிறது. காமிராவுடன் பேசிக் கொண்டு தனிமையில் வாழ்கிறார் அந்த புகைப்படக் கலைஞர் யாசிர் பாய். பார்க், பழைய காமிரா, பிலிம்ரோல்கள், லென்ஸ், புதிய காமிரா, சூழல் எல்லாமும் கதையில் புகைப்படக் காட்சிகள் போல் அழுத்தமாக பதிவாகியுள்ளன. அந்த சட்டகத்துக்குள் புகைப்படப் பின்னணியாக யாசிர் பாயின் நீண்ட வாழ்க்கையுள்ளது. அவர் காலத்தின் வேகத்துடன் பயணிக்க விரும்பவில்லை. புதிய காமிராவுடன் புது இடத்துப் பணியையும் துறந்து விட்டு, மகிழ்வூட்டும் பழைய காமிராக் காட்சி போன்ற நிலைக்கு திரும்பப் போக நினைக்கிறார். அவருக்கு எதிர்காலம் குறித்த கவலைகளில்லை. மனதின் மொழி படிந்த, நல்ல வடிவத்துடனான சிறந்த கதை இது.

கதை: பொது இடம்
ஆசிரியர்: பெருந்தேவி
இதழ்: காலச்சுவடு
பரிந்துரை: சிவப்ரசாத்

*

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எதிரெதி வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்குள் நடக்கும் சின்னப் போட்டி அல்லது மறைமுகமான சண்டை தான் பெருந்தேவியின் பொது இடம் என்ற குறுங்கதை. சின்ன உரையாடல் மூலமாகத் தீர்க்க வேண்டியப் பிரச்சினையை இரண்டு குடும்பமும் வளர்த்துக் கொண்டே போவதையும் அதை அந்த குடியிருப்பே இரண்டு பிரிவாக நின்று ஆதரிப்பதையும் மிகைபுனைவாக எழுதியிருக்கிறார். இந்த கதை Fernando Serrentino எழுதிய In Self Defence என்ற கதையை நினைவுபடுத்தியது. இதிலும் இரண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக தங்களுக்குள் மாறிமாறி பரிசுக் கொடுத்துக் கொள்வது எந்த எல்லை வரைக்கும் செல்கிறது என்பதை மிகைபுனைவாக எழுதியிருப்பார். Fernando ஐரோப்பியர்களின் போலியான அன்பை கிண்டலாக எழுதியிருப்பார். இக்குறுங்கதையில் பெருந்தேவி பெருநகர அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் மனோபாவத்தை பகடியாக எழுதியிருக்கிறார். நல்ல குறுங்கதை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s